சுண்டிக்குளம் கடல் பேய்ப்பாறைப்பிட்டியில் கடற்றொழிலில் ஈடுபடும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் நோக்குடன் இன்று காலை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறித்த பகுதிக்கு சென்று கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிருந்தார்.
குறித்த பகுதியில் 1991ம் ஆண்டு தொடக்கம் குறித்த பகுதி மீனவர்கள் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் குறித்த பகுதியை தனியொருவர் உரிமை கோரி வருகின்ற நிலையில் கடற்றொழிலாளர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைய குறித்த பகுதிக்கு சென்றிருந்தார்.
