Ottawa தெற்குப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
2019 ஆம் ஆண்டு காணாமல் போன Corey Baldwin என்பவருடையதா என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம், Greely பகுதியில் உள்ள ரைட் சாலை மற்றும் ஆல்பியன் சாலை சந்திப்பிற்கு அருகில் இந்த மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.
ஆரம்ப விசாரணையில், எச்சங்கள் ஒரு ஆணுடையது என்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும், அது Corey Baldwin உடையதா என்பதை உறுதிப்படுத்த இறுதி டி.என்.ஏ அறிக்கை வரும்வரை கத்துகிருக்க வேண்டியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது
பரிசோதனை முடிவுகள் கிடைத்தவுடன் மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் என ஒட்டாவா காவல்துறை தெரிவித்துள்ளது.
