நாட்டில் டிட்வா புயலால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பல்வேறு பிரதேசங்கள் பாதிக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக தரைமார்க்கமான போக்குவரத்து பாரியளவில் பாதிக்கப்பட்டதுடன், பல இடங்களுக்கான ரயில் சேவை துண்டிக்கப்பட்டது.
இதன்படி புத்தளம் ரயில் மார்க்கம் இன்று (16) முதல் முழுமையாக திறக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இதுவரைக் காலம் சிலாபம் வரையில் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று முதல் கொழும்பு கோட்டையிலிருந்து புத்தளம் வரை ரயில் சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
