அக்குரேகொட பகுதியில் துப்பாக்கி சூட்டினால் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த கொலை சம்பவத்திட்கு உதவி செய்த இருவர் தற்போது கைதாகியுள்ளனர்.
கைதானவர்கள் கொட்டாவை பகுதியை சேர்ந்த 20 மற்றும் 24 வயதுடைய சகோதரர்கள் என மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த இருவரும் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
