கியூபெக் மாகாணத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதைத் தீர்மானிக்கும் CAQ கட்சித் தலைமைப் போட்டியில், மாகாணத்தின் குடியேற்றக் கொள்கை ஒரு முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரத்து செய்யப்பட்ட PEQ எனப்படும் துரிதக் குடியேற்றப் பாதை திட்டத்தை மீண்டும் கொண்டு வரப் போவதாக முன்னணி வேட்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், முதலமைச்சர் பிரான்சுவா லெகோவின் அரசு PEQ திட்டத்தை அதிரடியாக ரத்து செய்தது.
இதனால் ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்கள் மற்றும் தற்காலிகப் பணியாளர்கள் நிரந்தரக் குடியுரிமை (PR) பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இவர்களை “PEQ அனாதைகள்” (PEQ Orphans) என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்த குடியேற்றக் கொள்கை மாற்றத்தை எதிர்த்து, மொன்ட்ரியல் உட்பட ஏழு முக்கிய நகரங்களில் கடந்த வாரம் மக்கள் வீதியில் இறங்கிப் போராடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
