தல்துவ – அமிதிரிகல பாரிய வாகன விபத்தொன்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இஇவ்விபத்து தொடர்பில் தெரிய வருகையில்,
கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மோதிய வேகத்தில் கார் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்ததுடன், மோட்டார் சைக்கிள் தீப்பற்றி முற்றாக எரிந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து இடம்பெற்ற போது காரில் 4 பேர் பயணித்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அவிசாவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும், அங்கு சிகிச்சை பலனின்றி மூவர் உயிரிழந்தனர்.
தற்போது மேலும் இருவர் அவிசாவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
