Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

காணி உரிமையாளர்களுக்கு எதிராக பொலிஸார் வழக்குகளை தொடர்ந்துள்ளனர் – எம்.ஏ. சுமந்திரன்

ஜனவரி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தமது காணிகளை கோரி போராட்டத்தில் ஈடுபடும் காணி உரிமையாளர்களுக்கு எதிராக தனித்தனியாக பொலிஸார் வழக்குகளை தொடர்ந்துள்ளனர் என ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தையிட்டி விகாரைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

அடாத்தாக கையகப்படுத்தப்பட்ட தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபடும் காணி உரிமையாளர்களுக்கு எதிராக பொலிஸார் தனித்தனியாக வழக்குகளை தொடுக்கின்றனர்.

குறிப்பாக காணி உரிமையாளர்களில் ஒருவரான வலி. வடக்கு பிரதேச சபையின் உறுப்பினருமான சாருஜனுக்கு எதிராக நாலைந்து வழக்குகளை பொலிஸார் தொடர்ந்துள்ளனர். அவற்றில் அவரை சந்தேக நபராக பெயர் குறிப்பிட்டுள்ளனர்.

இரு தரப்புக்கு இடையில் சமாதான சீர்குலைப்பு நடைபெறுவதாக பொலிஸார் வழக்கு தொடர்ந்தால் இரு தரப்பையும் நீதிமன்றில் முற்படுத்த வேண்டும். அதனை விடுத்து ஒரு தரப்பினருக்கு எதிராக மாத்திரம் தனித்தனியே வழக்குகளை தொடர்ந்து கொண்டே இருக்க முடியாது.

பொலிஸார் தான் ஒட்டு மொத்தமாக சட்டவிரோதமான முறையில் நடந்துகொண்டு இருக்கின்றனர் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எமது சமர்ப்பணங்களில் முன் வைத்துள்ளோம் என தெரிவித்தார்.

முந்தைய செய்தி பாண்டியன் என்ற பெயரில் பாரம்பரிய உணவகத்திற்கான அடிக்கல் நாட்டல்
அடுத்த செய்தி வடக்கு மாகாண ஆளுனருக்கு கடிதம் அனுப்பிய பா.உ. சத்தியலிங்கம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

1
அண்மைய செய்திகள்இலங்கை

வடக்கில் 30 வருடங்களாக சுகாதாரத்துறையில் ஆளணி மறுசீரமைப்பு நடைபெறவில்லை…

மார்ச் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இன்றைய தினமும் செம்மணியில் 07 என்புக்கூடுகள் அடையாளம்

ஜூன் 18, 2026
இலங்கை

சாரதிகளுக்கு போக்குவரத்துத் திணைக்களம் வெளியிட்ட அறிவித்தல்!

செப்டம்பர் 30, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இடமாற்றம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள்

மார்ச் 24, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?