இணைக்கப்பட்ட இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகளின் சுவர்களுக்குள் இரண்டு வாரங்களுக்கும் மேலாகத் தீவிரமாக எரிந்து கொண்டிருந்த நெருப்பு, தற்போது முற்றிலுமாக அணைக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டொராண்டோ நகரத்தின் தீயணைப்புத் துறை அதிகாரிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
11 தோன் கிளிஃப் பார்க் டிரைவ் மற்றும் 21 ஓவர்லியா பவுல்வர்ட் ஆகிய கட்டிடங்களுக்கு இடையிலேயே இந்த தீவிபத்து ஏற்பட்டது.
கடந்த நவம்பர் மாதம் 27 ஆம் திகதி அன்று ஏற்பட்ட இந்தத் தீ விபத்தினால், இரண்டு கட்டிடங்களிலும் இருந்த 408 குடும்பங்களையும் அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.
தீ அணைக்கப்பட்டாலும், குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளுக்கு, உடனடியாக திரும்ப முடியாத நிலையே தற்போது காணப்படுகின்றது.
