கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஹட்டன் மற்றும் கொட்டகலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வாகனமொன்று வட்டவளை ரொசல்ல பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் போது சாரதிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதுடன், வாகனத்தில் 8 பேர் பயணித்துள்ளனர்.
விபத்திற்குள்ளானோர் வட்டவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணையை போலீசார் மேட்க்கொண்டு வருகின்றனர்.
இதன்படி வாகன சாரதிக்கு நித்திரை ஏற்பட்ட காரணத்தினாலே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
