நுவரெலியா மாவட்டத்தில் இன்று 01 வரை 75 பேர் உயிரிழந்துள்ளதுடன் 62 பேர் காணாமல் போயுள்ளனர். 2,691 குடும்பங்கரளச் சேர்ந்த 12,304 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் அனர்த்தம் தொடர்பான அறிக்கையை நுவரெலியா அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ளது.
இந்த இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கான மூன்று நாட்களுக்கான சமைத்த உணவு வழங்கப்படும். ஏனைய நாட்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு முகாம்களில் சமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும்.
அதே நேரம் நுவரெலியா கண்டி வீதி முற்றாக நுவரெலியா இராகலை வீதி நுவரெலியா வெலிமடை வீதி தலவாக்கலை பூண்டுலோயா வீதி லிந்துலை அக்கரபத்தனை வீதி ஆகிய வீதிகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் போக்குவரத்திற்காக பயன்படுத்த முடியாத நிலைமையே காணப்படுகின்றது. இதற்கு பதிலாக மாற்று பாதைகளையே பாவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன் மாற்று பகுதிகளுக்கு ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்ட நிலையிலேயே உள்ளது.


