Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் தற்போதும் சீரற்ற காலநிலை – 310 பேர் நிலை என்ன?

நவம்பர் 29, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மன்னார் மாவட்டம் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுமார் 310 பேர் எவ்விதத் தொடர்புமின்றி இருப்பதாகவும், அவர்கள் மரங்களிலும், கட்டிடங்களின் கூரைப் பகுதிகளிலும் தஞ்சமடைந்துள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தொலைபேசித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
“குறித்த 310 பேரும் கடந்த இரண்டு நாட்களாக எவ்விதத் தொடர்புகளுமின்றித் தவிக்கின்றனர். நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்த நிலையில் சிலரைப் படகுகள் மூலம் மீட்டுள்ளோம்.

மேலும், கூராய் பிரதேசத்தில் 36 பேர் தொடர்புகளின்றி மரங்களிலும், கூரைகளின் மீதும் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.

அவர்களை மீட்கும் நடவடிக்கையில் கடற்படையினர், விமானப்படையினர் மற்றும் ஏனைய அரச உத்தியோகத்தர்களின் உதவியுடன் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம். கடற்படையினரின் மீட்புப் பணிக்காகச் சென்ற படகு, வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளமையினால் பாதிக்கப்பட்ட மக்களை நெருங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சீரற்ற வானிலை காரணமாக விமானப்படையின் உதவியையும் பெற்றுக்கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விமானப்படைக்குச் சொந்தமான உலங்குவானூர்தி மீண்டும் வவுனியாவிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

வானிலை சீரான நிலைக்குத் திரும்பும் சந்தர்ப்பத்திலேயே மீட்பு நடவடிக்கைகளைத் தொடர முடியும். மேலும் மாந்தை மேற்கு, மடு, முசலி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. மாந்தை மேற்கு பிரதேசம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களைப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.அத்துடன், மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கான போக்குவரத்துகளும் தடைப்பட்டுள்ளன” என அவர் மேலும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி டித்வா புயல் பாதிப்பு – உயரிழந்தோர் எண்ணிக்கை 159 ஆக உயர்வு!
அடுத்த செய்தி T20 முத்தரப்பு தொடரில் இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழ் போதனா வைத்தியசாலையின் என்புமுறிவு விடுதிகள் புதிய கட்டிடத்தொகுதிக்கு மாற்றம்!

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்கியூபெக்

லவால் மற்றும் டெர்ரெபோன்னில் நூற்றுக்கணக்கான வாடகை வீடுகளை அமைக்க லிபெரல் அரசு திட்டம்..!!

மார்ச் 20, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட  பாடசாலைகளை மூடுவது தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

ஆகஸ்ட் 28, 2025
அண்மைய செய்திகள்ஆரோக்கியம்

பாதாம் பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

மே 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?