மோசமான வானிலை காரணமாக ஏற்படும் அவசரநிலைகளை 117 என்ற எண்ணிற்கு தெரிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மோசமான வானிலையால் ஏற்படும் ஆபத்துக்கள் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றன.
இடம்பெயர்ந்தவர்களுக்கான பாதுகாப்பு மையங்களை நிறுவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
