Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அவசர அறிவித்தல்

நவம்பர் 20, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பெரிய கரிசல் கிராமத்தில் நாளை வெள்ளிக்கிழமை (21) தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் புதிய நீர் இணைப்புகள் வழங்கும் முகாம் இடம்பெற உள்ளதாக மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

புதிய நீர் இணைப்புகள் வழங்கும் முகாம் ஆரம்ப நிகழ்வு பெரிய கரிசல் பள்ளிவாசலில் நாளை வெள்ளிக்கிழமை (21) காலை 9 மணி முதல் பிற்பகல் 3 வரை இடம் பெற் உள்ளதோடு, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் புதிய நீர் இணைப்புகள் வழங்கும் நடவடிக்கைளும் முன்னெடுக்கப்படவுள்ளது.

பொதுவாக, ஒரு புதிய நீர் இணைப்பு பெற தேசிய நீர்வழங்கல் சபை அலுவலகத்திற்குச் சென்று, புதிய இணைப்புக்கான விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொண்டு, அதை நிரப்பி தேவையான ஆவணங்களுடன் மீண்டும் அலுவலகத்தில் சென்று சமர்ப்பிக்க வேண்டும்.

பின்னர், அதிகாரிகள் உங்கள் இல்லத்துக்கு சென்று தகுதி ஆய்வு மேற்கொண்டு, அதன் அடிப்படையில் மதிப்பீடு தயாரித்து வழங்குவார்கள். அதன் பிறகு, மதிப்பீட்டின் அடிப்படையில் தொகையை வங்கியில் சென்று செலுத்திய பின்னர் உங்கள் இல்லத்திற்கான புதிய இணைப்பு வழங்கப்படும்.

இவ்வாறு செய்யும் நடைமுறையில், பல முறை அலுவலகத்திற்குச் சென்று வரவும், பல நாட்கள் எடுத்துக் கொள்ளவும் நேரிடுகிறது.

இந்த சிரமங்களை தவிர்க்கவும், மக்களின் நேரத்தையும் முயற்சியையும் மிச்சப்படுத்தவும், செயல்முறையை விரைவு படுத்தவும், ஒரே நாளில் விண்ணப்பம் முதல் கட்டணம் செலுத்துதல் வரை அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்கும் முகாம்கள் மன்னார் தேசிய நீர் வழங்கல் சபையினால் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

இந்த முகாமை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, தேவையற்ற அலைச்சல் இன்றி புதிய நீர் இணைப்புக்கான சேவைகளை பெறுமாறு கேட்டுக் கொள்வதாக மன்னார் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

முந்தைய செய்தி வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் மாவீரர்களுக்கு அஞ்சலி
அடுத்த செய்தி வர்த்தகத் தடைகளை நீக்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

தமிழ் மரபுத் திங்கள் 2026

EYETAMIL NIGHT 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

கிறிஸ்து பிறப்பு விழா குறித்து யாழ் மறை மாவட்ட குரு முதல்வரின் அறிவிப்பு!

டிசம்பர் 6, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மாத்தறை நீதிமன்றத்தில் முன்னிலையானார் தேசபந்து !

மார்ச் 19, 2025
இலங்கை

நீர் தேங்கியிருந்த பகுதியில் வீழ்ந்து உயிருக்குப் போராடிய சிறுத்தை மீட்பு!

செப்டம்பர் 20, 2025
இலங்கை

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு

நவம்பர் 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?