வெல்லவாய பொலிஸ் பிரிவின் வெல்லவாய-தனமல்வில வீதியில் ஆதாவெலயாய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனமல்வில வெல்லவாய திசை நோக்கிச் சென்ற இராணுவ பஸ்ஸொன்றும் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இன்று இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
சடலம் வெல்லவாய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


