உகாண்டாவின் மிகவும் பரபரப்பான நெடுஞ்சாலைகளில் ஒன்றில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் குறைந்தது 63 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தலைநகர் கம்பாலாவிற்கும் வடக்கு நகரமான குலுவிற்கும் இடையிலான நெடுஞ்சாலையில் குறித்த விபத்து நிகழ்ந்தது.
எதிர் திசைகளில் இருந்து வந்த இரண்டு பேருந்துகள், ஒரு லொரி மற்றும் பரிதொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றதால் இந்த விபத்து ஏற்பட்டதாக ஆரம்ப விசாரணைகள் தெரிவிக்கின்றன.