கடந்த ஆகஸ்ட் 25 ஆம் திகதி முதல் மருதானையில் காணாமல் போனதாகக் கூறப்படும் ஒருவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
காணாமல் போனவரின் மனைவி அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து மருதானை பொலிஸார் இது தொடர்பான விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
காணாமல் போனவர் பிபிலைச் சேர்ந்த 28 வயதுடையவர் என்றும், அவர் கொழும்பில் உள்ள ஒரு மருத்துவமனையில் தாதியராகப் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர் பற்றிய தகவல் தெரிந்த பொதுமக்கள் 071-8591563 அல்லது 011-2692888 என்ற தொலைபேசி எண்கள் மூலம் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.