உணவுகளில் அதிகமாக வெள்ளைப்பூண்டு தான் சேர்க்கப்படுகிறது. ஆனால், நம்மில் பலருக்கும் கறுப்பு பூண்டு என்று ஒரு வகை உண்டு என தெரியாது.
வெள்ளைப்பூண்டை நொதித்தல் செயல்முறைக்கு உட்படுத்தி அதனை கறுப்பாக மாற்றுவதே கறுப்பு பூண்டு.
நொதித்தல் செயல்முறையினால் வெள்ளைப்பூண்டின் நிறம், அமைப்பு, சுவை அனைத்துமே மாறுகிறது. இந்த கறுப்பு பூண்டில் பலவிதமான நன்மைகள் உள்ளடங்கியுள்ளன.
கறுப்பு பூண்டில் காணப்படும் சில இரசாயனக் கலவைகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து கலோரிகளை வேகமாக எரிக்கிறது. இதனால் எடை குறைகிறது.
கறுப்பு பூண்டில் பல ஒட்சிசனேற்ற பண்புகள் இருப்பதால் ஃப்ரீராடிக்கல்களை நடுநிலையாக்கி நோய்களை குணப்படுத்தும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் தன்மையை அதிகரிக்கிறது.
மேலும் இதில் காணப்படும் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஒட்சிசனேற்ற பண்புகள் புற்றுநோயை எதிர்த்து போராடுகிறது.
கறுப்பு பூண்டை தொடர்ச்சியாக உட்கொள்ளும்போது கொலஸ்ட்ரோல், இரத்த அழுத்தம் குறைவதால் இதய நோய்க்கான அபாயம் குறைகிறது. மேலும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை உருவாக்க உதவுகிறது.