போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை எதிர்த்துப் போராடும் நோக்கில், நாடு முழுவதும் தினமும் ஏராளமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் பொலிஸார், விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையினரால் நாடு முழுவதையும் உள்ளடக்கி மேற்கொள்ளப்படுகின்றன.
அதன்படி, கடந்த மூன்றாம் திகதி முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் போது போதைப்பொருள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகளில் பொலிஸார், விசேட அதிரடிப் படை மற்றும் முப்படைகளைச் சேர்ந்த 6,644 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதில் 27,727 நபர்கள் சோதனை செய்யப்பட்டுள்ளனர், 10,900 வாகனங்கள் மற்றும் 8,385 மோட்டார் சைக்கிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
அந்த சோதனைகளின் போது, போதைப்பொருள் தொடர்பாக 971 பேர் கைது செய்யப்பட்டனர், குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட 21 பேர் மற்றும் 449 பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.