இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது.
மனிதாபிமானமற்ற முறையில் காஸாவிலுள்ள முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் காஸா மக்களுக்கு கடைசி எச்சரிக்கை என்று கூறி இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இன்றையதாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 22 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காஸா மக்களுக்கு உணவு, உடைமைகள், மருந்துகள் ஆகியவற்றை கொண்டுவரும் சமூக ஆர்வலர்களின் கப்பலை இஸ்ரேல் கடற்படை தடுத்து நிறுத்தி வருகிறது.
குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா அமைப்பின் கடைசி கப்பலையும் இஸ்ரேல் கடற்படை தடுத்து நிறுத்தியுள்ளது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.