கியூபெக் மாகாணத்தில் உள்ள லாவல் நகரில் பரபரப்பான வணிக வளாகத்தில் இயங்கி வந்த ஸ்டார்பக்ஸ் (Starbucks) கடையில் பகல் நேரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், சட்டவிரோத குற்றவியல் குழுவுடன் தொடர்புடைய ஒருவர் கொல்லப்பட்டார்.
இதன்போது மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். இது ஒரு திட்டமிட்ட கொலைக்கான (Planned Hit) அனைத்து அறிகுறிகளையும் கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொல்லப்பட்டவர் சட்டவிரோதக் குற்றவியல் குழுவின் முக்கிய நபராகக் கருதப்படும் சரலாம்போஸ் தியோலோகு (Charalambos Theologou)
ஆவார்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மற்ற இரண்டு நபர்களும், உயிரிழந்த தியோலோகுவின் குழுவான ‘சோமடி கிரீக்ஸ்& (Chomedey Greeks)
கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று காலை 10:30 மணியளவில், லாவல் நகரில் உள்ள நெடுஞ்சாலை 440 சேவைச் சாலையின் (Highway 440 service road)
மூலை மற்றும் 100வது அவென்யூவில் அமைந்திருந்த ஸ்டார்பக்ஸ் கடையில் நடைபெற்றது. அழைப்பு வந்ததையடுத்து லாவல் காவல்துறையினர் உடனடியாக அங்கு விரைந்தனர். துப்பாக்கிச் சூடு நடந்தபோது, ஸ்டார்பக்ஸ் மற்றும் அதனைச் சுற்றியிருந்த உணவகங்கள் மற்றும் கடைகள் நிறைந்த அந்த வளாகத்தில் பலபொதுமக்கள் இருந்தனர்.
இந்த குற்றச்செயல் தொடர்பில் லாவல் காவல்துறையினர் நெடுஞ்சாலை 440 அருகே ஒரு தேடுதல் நடத்தி வருவதை உறுதிப்படுத்தினர். கியூபெக் பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் இயன் லாஃபிரேனியர் (Ian Lafrenière) செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தத் துப்பாக்கிச் சூடு சட்டவிரோதக் குற்றவியல் குழுவுடன் தொடர்புடைய இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் என்று கூறினார்.
சட்டவிரோதக் குற்றவியல் குழுக்கள் மீதான அழுத்தம் தொடரும் என்று அமைச்சர் லாஃபிரேனியர் உறுதியளித்தார்.