இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) புதிய தலைவராக, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மிதுன் மனாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
BCCI என்பது உலகின் சிறந்த கிரிக்கெட் வாரியங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்த வாரியத்தின் புதிய பொறுப்பை ஏற்றுள்ள மிதுன் மனாஸ், “இது மிகப்பெரிய பொறுப்பு. இந்தக் கிரிக்கெட் கட்டமைப்பை நான் மேலும் முன்னோக்கி எடுத்துச் செல்வேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் அடுத்த கட்ட வளர்ச்சியை தீர்மானிக்கும் மிக முக்கியமான பொறுப்புக்கு அவர் வந்துள்ளது, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.