Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மன்னாரில் மக்களை தாக்கிய பொலிஸார் மீது கண்டனம்!

செப்டம்பர் 28, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மன்னாரில் கற்றாலை திட்டத்திற்கு எதிராக அகிம்சை வழியில் போராடிய கத்தோலிக்க மதகுருக்கள் மற்றும் பொதுமக்கள் மீதான பொலிஸாரின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, தாக்கிய பொலிசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் ஜோன் ஜிப்பிரிக்கோ கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னார் தீவில் மேற்க்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள காற்றாலை திட்டத்தை எதிர்த்து அமைதி வழியில் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு உறுதுணையாக செயற்பட்டு வரும் கத்தோலிக்க மதகுருக்கள் மீது அடக்குமுறையை பிரயோகித்து அச்சுறுத்தும் நோக்குடன் திட்டமிட்ட ரீதியில் பொலிஸார் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

அத்ததுடன் இப்போராட்டத்தை குழப்பிட முனைந்து அமைதியான முறையில் தமது கருத்துக்களை வெளிப்படுத்த முயன்ற பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதை தடுக்க முயன்ற கத்தோலிக்க மதகுருக்களை தாக்கி தூக்கியெறிந்து அவர்களை அச்சுறுத்தியும் உள்ளனர்

இத் தாக்குதல் அரச இயந்திரத்தின் வன்முறை மற்றும் அத்துமீறலின் உச்சமாகும். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஜனநாயக விரோதச் செயலாகும்.

அரசாங்கமும், காவல்துறையும் தமிழ் மக்களின் உரிமைக்குரல்களை அடக்குவதற்கும், அச்சுறுத்துவதற்கும் எடுக்கும் முயற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

மக்களோடு மக்களாக இணைந்து போராடிய மதத் தலைவர்கள் மீதான தாக்குதல் அடிப்படை மனித உரிமைகள் மீதான அப்பட்டமான மீறலாகும். மக்களின் அமைதியான ஒன்றுகூடல் உரிமையும், பேச்சுச் சுதந்திரமும் இங்கு மீறப்பட்டுள்ளது அவை பாதுகாக்கப்பட வேண்டும்.

மக்கள் போராட்டங்களால் ஆட்சிக்கு வந்த சனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்தச் சம்பவத்தின் தீவிரம் உணர்ந்து உடனடியாகவும், பக்கச்சார்பற்ற விதத்திலும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம்.

போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் குரலுக்கு மதிப்பளித்து இந்த காற்றாலை திட்டத்தை நிறுத்த ஜனாதிபதி முன்வருவதுடன் மன்னார் தீவில் வாழும் மக்களின் எதிர்காலமும், தொழில்களும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என ஊடங்களுக்கு அவர் அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி நெடுந்தீவில் 12 இந்திய மீனவர்கள் கைது
அடுத்த செய்தி ரயிலின் இயத்திரத்தின் அடியில் சிக்கிக்கொண்ட பெண் – பத்திரமாக மீட்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கையில் மீண்டும் தீவிரமடைகிறது எலிக்காய்ச்சல்- சிறுவர்களுக்கு எச்சரிக்கை!(Video)

ஆகஸ்ட் 11, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

இலஞ்சம் பெற்ற கிராம சேவகர் கைது – யாழில் சம்பவம்

மே 29, 2025
இலங்கை

புத்தாண்டில் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்ட யாழ் சர்வதேச விமான நிலையத்தினர்

ஜனவரி 1, 2026
இலங்கை

குருநகரில் உதைப்பந்தாட்ட அறிவிப்பாளர் மீது தாக்குதல்

ஆகஸ்ட் 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?