Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திக்குழுக் கூட்டம்!

செப்டம்பர் 25, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

முல்லைத்தீவு மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திக்குழு கூட்டம் இன்றைய தினம் (25) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் பி.ப 2.00 மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. எஸ்.குணபாலன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, மாவட்ட ரீதியில் சிறுவர்கள் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சிறுவர் பாதுகாப்பு மற்றும் துஸ்பிரயோகம், சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகளுடன் விரிவாக ஆராயப்பட்டன.

மேலும் பாடசாலை மாணவர்களின் வரவு ஒழுங்கின்மை மற்றும் இடைவிலகல், மாணவர்களின் மீளிணைப்பு செயற்பாடுகள், அறநெறிக்கல்வி, சுகாதாரம் மற்றும் உணவு, பிறப்புச் சான்றிதழ் தொடர்பான நடவடிக்கைகள், சிறுவர் கழக செயற்பாடுகள், கிராமிய சிறுவர் அபிவிருத்திக் குழு செயற்பாடுகள், சிறுவர் தொழில்கள், பால்நிலை சார் வன்முறைகள், துறைசார்ந்து பணியாற்றுகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

மூன்றாம் நிலைக் கல்வி, பால்நிலை சமத்துவம், பிரசவத்தின் போது பிள்ளைகள், தாய்கள் இறப்பு தொடர்பான விடங்களை எவ்வாறு கட்டுப்படுத்தல், இளவயது திருமணத்தினை குறைத்தல் மற்றும் கண்காணித்தல் முதலான விடயங்களும் கருத்தில்க கொள்ளப்பட்டு கலந்துரையாடப்பட்டன.

தொடர்ந்து சட்டவிரோத போதைப்பொருள் ஒழிப்பு, தொடர்பாக விசேடமாக கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.ஜெயக்காந் (காணி) , பிரதேச செயலாளர்கள், மாவட்ட உதவி செயலாளர் , உதவிப் பிரதேச செயலாளர்கள்,பொலிஸ் பொறுப்பதிகாரிகள், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், முன்பிள்ளை பருவ உத்தியோகத்தர்கள், பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்தி அதிகரித்து செல்லும் கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு விலை!
அடுத்த செய்தி மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தை 30ஆம் திகதி முதல் ஆரம்பிக்க நடவடிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணத்தில் 230 கிலோ கஞ்சா மீட்பு

ஜூன் 7, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மக்களின் ஜனநாயக போராட்டங்களை ஒடுக்கவே “பயங்கரவாத தடைசட்டம்”

பிப்ரவரி 21, 2026
இலங்கை

மட்டக்களப்பில் பணம் மோசடி செய்த நபர் கைது.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட பாடலுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை – நா. உ.க இளங்குமரன்

ஜூன் 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?