முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்காக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா இன்று தங்காலைக்கு சென்றிருந்தார்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தனக்கும் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான நெருங்கிய நட்பு இருப்பதாகவும், அந்த நட்பை பிரதிபலிக்கும் விதமாக அவரைச் சந்திக்க சென்றதாக அவர் கூறினார்.
இதேவேளை மஹிந்த ராஜபக்ஷவை விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறுமாறு கூறியமை நியாயம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அந்த தீர்மானத்தை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டைக் காப்பாற்றிய தலைவர் இவ்வாறு நடத்தப்பட்டதற்கு வருத்தப்படுவதாகவும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா கூறுகிறார்.
