Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மயிலிட்டியில் காணி உரிமையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொலிஸார்

செப்டம்பர் 1, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பிக்க சென்ற ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக, வலி.வடக்கில் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் போராட்டத்தை முன்னெடுக்க முயன்ற போது, பொலிஸார் முதியவர்கள், பெண்கள் என வேறுபாடின்றி மிக மோசமான முறையில் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி இருந்தனர்.

அதேவேளை குறித்த சம்பவத்தை செய்தி சேகரிக்க முயன்ற ஊடகவியலாளர்களையும் பொலிஸார் மிரட்டி தகாத வார்த்தைகளால் பேசி துரத்தியடித்துள்ளனர்.

மயிலிட்டித்துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்றைய தினம் திங்கட் கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதன் போது, கடந்த 35 வருட காலங்களுக்கு மேலாக தமது சொந்த இடங்களில் இருந்து வெளியேறி தற்காலிக இடங்களில் வசிக்கும் மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கடந்த பல வருடங்களாக கோரி வருகின்றனர்.

இந்நிலையில் இன்னமும் காணிகள் விடுவிக்கப்படாமல் உள்ள காணிகளின் உரிமையாளர்கள் , ஜனாதிபதியின் கவனத்தினை ஈர்க்கும் முகமாக , மயிலிட்டி பகுதியில் வீதியோரமாக அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தினை நடாத்த முயன்றிருந்தனர்.

இந்நிலையில் பொலிஸார் வயோதிபர்கள் பெண்கள் என்ற வேறுபாடுகள் இன்றி , அவர்களை மிக மோசமான வார்த்தைகளால் திட்டி , அவர்களை தமது பலத்தினை பயன்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இன்றி , பெண்களை ஆண் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் தள்ளி , தகாத வார்த்தைகளால் பேசி அப்புறப்படுத்தி இருந்தனர்.

இந்த சம்பவத்தினை செய்தி சேகரித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர்களையும் பொலிஸார் அச்சுறுத்தி அங்கிருந்து துரத்தியடித்தனர்

மக்களின் காணிகள் மக்களுக்கே என கூறி ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி , தான் பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு , அபிவிருத்தி பணிகளை தொடங்கி வைக்க வந்த வேளை , எமது காணிகளை விடுவியுங்கள் என அவரின் கவனத்தை ஈர்க்கும் முகமாக நாம் போராட்டத்தை நடாத்த முற்பட்ட போது கடந்த கால அரசாங்கம் போன்றே , பொலிஸார் எம் மீது காட்டுமிராண்டி தனமாக நடந்து கொண்டுள்ளார்.

மாற்றம் என கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் , தமிழ் மக்கள் விடயத்தில் மாற்றத்தை விரும்பவில்லை என்பதே பொலிஸார் எம்முடன் நடந்து கொண்ட விடயம் சான்று பகிர்கின்றது என காணி உரிமையாளர் ஒருவர் கவலையுடன் தெரிவித்தார்.

முந்தைய செய்தி மயிலிட்டி மீன்பிடித்துறைமுக அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி!
அடுத்த செய்தி விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் ஒரு பிள்ளையின் தந்தை பலி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் மேற்க் கொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்….

ஏப்ரல் 25, 2025
இலங்கை

யாழில் கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

ஜனவரி 7, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில். கடற்தொழிலுக்கு சென்ற சிறுவன் கடலில் மூழ்கி உயிரிழப்பு

செப்டம்பர் 27, 2025
இலங்கை

மின்சார சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து!

செப்டம்பர் 23, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?