விஞ்ஞானிகள் கண்டுபிடிப்புகளில் பலவிதமான புரட்சிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது கடல்சார் உயிரினங்களின் நலனைக் கருத்தில்கொண்டு புதிய முயற்சியொன்றை செய்துள்ளனர்.
அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் பாசி சக்தியால் இயங்கும் ரொபோ மீனை உருவாக்கியுள்ளனர்.
இது இயற்கையாக நீந்துவதோடு, உயிருடன் கூடிய பவளங்களை 3D முறையில் அச்சிட்டு, சேதமடைந்த பவளப்பாறைகளை மீண்டும் உயிர்ப்பிக்கிறது.
பவளப்பாறைகள் கடல்சார் உயிரினங்களுக்கு அவசியமானவை. ஆனால், காலநிலை மாற்றம், மாசு, கடல் வெப்பம் ஆகியவை அவற்றை விரைவில் அழித்து வருகின்றன. இந்த ரொபோ மீன் பசுமையான சக்தியையும் உயிரியல் அச்சு தொழில்நுட்பத்தையும் இணைத்து, பவள வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
இதன் மூலம் கடல் உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டு, சூழலியல் சமநிலை மீட்கப்பட்டு, கார்பன் உறிஞ்சுதலுக்கும் உதவுகிறது. இந்த கண்டுபிடிப்பு உலகின் கடல்சார் வளங்களை மீட்கும் பெரிய படியாக கருதப்படுகிறது.