Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் கிளிநொச்சியில் ஊடக சந்திப்பு

ஆகஸ்ட் 17, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்னாக்க அவர்கள் இன்றைய தினம்17.08.2025 கிளிநொச்சியில் ஊடக சந்திப்பு ஒன்றை மேற்கொண்டு இருந்தார்

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் இரண்டாம் திகதி அளவில் புது குடியிருப்பு பகுதிக்கு எமது நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் இந்த நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யும் நோக்கில், எதிர்கால சந்ததியினரின் நலனை கருத்தில் கொண்டு 40,000 தென்னை செய்கையினை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நோக்கில் இவ்வருடத்தில் 16 ஆயிரம் தென்னை செய்கையை மேற்கொள்வதற்காக பெருந்தோட்ட அமைச்சர் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி போன்ற பகுதிகளில் சென்று தென்னை செய்கை தொடர்பான சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகளுடன் மற்றும் தென்னை செய்கையாளர்களுடன் கலந்துரையாடி ஆலோசனைகளை பெற்றுச் சென்றுள்ளார்.

அதில் முதல் கட்டமாக வருகின்ற 02.09.2025 புது குடியிருப்பு பகுதிக்கு ஜனாதிபதி அவர்கள் வருகை தர உள்ளார் வருகை தருகின்ற ஜனாதிபதி புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள தென்னை செய்கையாளர்களுக்கான ஆவணங்களை வழங்குவதுடன், புதுகுடியிருப்பு வட்டுவாகல் பாலத்தினை ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பதன் ஆரம்ப நிகழ்விலும் கலந்து கொள்ள உள்ளார்.

தொடர்ந்து மேலும் தெரிவிக்கையில் தற்பொழுது இருக்கின்ற அரசியல்வாதிகள் பலர் வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் குறிப்பாக முன்னைய காலங்களில் போலவே தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

குறிப்பாக தமிழரசு கட்சியின் சுமந்திரன் அவர்கள் முத்தையங்கட்டு பகுதியில் உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கேட்டு 18.08.2025 அன்றைய தினம் வடக்கு கிழக்கு பல பகுதிகள் கதவடைப்புக்கு ஆதரவு தரும்படி கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இவர் இதற்கு முன்னர் முத்தையங்கட்டு பகுதிக்கு பல பதவிகளை வகித்த காலப்பகுதியில் அங்கு சென்றுள்ளாரா அங்குள்ள நிலைமைகள் பற்றி ஏதும் அறிந்துள்ளாரா தற்பொழுது அரசியல் லாபத்திற்காகவே அதனை கருதியே இப்படியான சில விடயங்களை மேற்கொண்டு வருகின்றார் எனவும் தெரிவித்தார்.

முத்தையங்கட்டு பகுதியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் முற்படுத்தப்பட்டுள்ளனர். சில அரசியல்வாதிகள் இச்சம்பவத்தை தொடர்பு படுத்தி அரசியல் லாபத்தை பெறுவதற்காகவே சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாங்கள் சட்டரீதியாக நடவடிக்கைகளை மேற்கொண்டே வருகின்றோம் இனி வரும் காலங்களில் இவர்களுக்கு தக்க பாடத்தினை மக்கள் கற்பிப்பார்கள் எனவும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி நல்லூரானுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் – பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு!
அடுத்த செய்தி சமஷ்டி கோரிக்கையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு தழுவிய போராட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது!

அக்டோபர் 23, 2025
இலங்கை

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மருந்தாளர் பற்றாக்குறை

ஏப்ரல் 8, 2026
இலங்கை

யாழில். போதைப்பொருள் பாவனையால் ஒருவர் உயிரிழப்பு

டிசம்பர் 19, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

முல்லைத்தீவில் கடற்தொழிலுக்கு சென்ற மீனவர் மாயம்!

ஜூன் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?