அமெரிக்காவின் மொன்டானாவின் கலிஸ்பெல்லில் உள்ள ஒரு விமான நிலையத்தில் தரையிறங்கிக் கொண்டிருந்த ஒரு சிறிய விமானம், நிறுத்தப்பட்டிருந்த விமானத்தின் மீது மோதியதில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த விபத்தில் எவருக்கும் பாதிப்பில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நான்கு பேரை ஏற்றிச் சென்ற ஒற்றை எஞ்சின் விமானம் நேற்று பிற்பகல் 2 மணியளவில் விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது.
விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் மோதியதால், நிறுத்தப்பட்டிருந்த விமானம் மீது குறித்த விமானம் மோதி தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
