பொலன்னறுவை – பராக்கிரம சமுத்திரத்தில் படகு கவிழ்ந்ததில், 63 வயது தந்தை மற்றும் அவரது 38 வயது மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்..
படகு கவிழ்ந்ததும், உடனடியாக அப்பகுதி மக்கள் மற்றும் பொலிஸார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.
படகு கவிழ்ந்ததற்கான சரியான காரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.