தென்னிந்தியாவில் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு விரத மற்றும் வழிபாட்டு நாளாக கருதப்படுவது வரலட்சுமி விரதம். திருமணமான பெண்கள் தங்களின் கணவர் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமாக வாழ்வதற்கும், மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கும், குடும்ப செல்வ செழிப்புடனும், நலமுடனும் வாழ்வதற்கு இந்த விரதத்தை கடைபிடிக்கிறார்கள். திருமணமாகாத பெண்களும், ஆண்களும் கூட இந்த விரதம் கடைபிடிப்பது உண்டு.
வரலட்சுமி விரதம் தோன்றிய புராணக் கதை பற்றி தெரியுமா?
மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கு மிக சிறந்த நாளாக வரலட்சுமி விரதம் கருதப்படுகிறது. வேண்டும் வரங்களையும், அரச பதவியையும் பெற்றுத் தரும் சிறப்புமிகுந்த விரதமாக வரலட்சுமி விரதம் கருதப்படுகிறது. இந்த விரதம் எப்படி உண்டானது என்ற கதையை தெரிந்து கொண்டு வரலட்சுமி விரதம் இருப்பது இந்த விரதத்தின் முழு பலனையும் கிடைக்க செய்யும்.