தம்புள்ளையில் அமைந்துள்ள திகம்பதஹ சரணாலயத்திற்குள் மூன்று காட்டு யானைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த யானைகள் பல நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் எனவும் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் மூன்று தனித்தனி இடங்களில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் வனவிலங்கு பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த யானைகளில் ஒன்று 40 வயதுடையது என்றும், மற்ற இரண்டும் முறையே 16 மற்றும் 15 வயதுடையவை என்றும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
