செம்மணி மனித புதைகுழி தொடர்பான மனித எலும்புக்கூட்டு படங்களை AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாற்றியமைப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
செம்மணி மனித புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்டோர் சார்ப்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் நீதிமன்றத்திலும் புதைகுழியிலும் செயற்படுகின்ற சட்டத்தரணிகள் என்ற அடிப்படையில் பொறுப்பான சில கருத்திக்களை தெரிவிக்க வேண்டியுள்ளது.
இந்த புதைகுழி தொடர்பான வழக்கு குற்றவியல் விசாரணைகளுடன் தொடர்ந்து இடம்பெற்றுவரும் வழக்காகும்.
அந்த வழக்கு விசாரணை நடவடிகைகளில் இருக்கிற பொருட்களை இருக்கும் சான்று பொருட்களாகவே கொண்டு விசாரணகள் இடம்பெற்றுவரும் சந்தர்ப்பத்தில், பாதிக்கப்பட்டவர் தொடர்பான ஒரு உண்மை தன்மை, சுய அடையாளங்களை தேடுதலின் அடிப்படையில் பேணி பாதுகாக்க வேண்டிய கடப்பாடு இருக்கிறது.
அவ்வாறு ஒருக்கையில் AI ஐ பாவனை செய்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது தவறான விடயமாகும். போலியான தகவல்கள் சமூக தளங்களை போய் சேரும்போது எதிர்காலத்தில் குற்றவியல் விசாரணைகளுக்கு தடையாக அமையும்.
செம்மணியில் மண் மாதிரிகளை பகுப்பாய்வு செய்வதற்கு வந்த குழு வழக்கை திசை திருப்புவதற்கான யுக்தி
பாதிக்கப்பட்டவர்களுக்கான இந்த வழக்கை திசை திருப்புவதற்கான ஒரு யுக்தியாகவே பாதிக்கப்பட்டவர்கள் இதனை பார்க்கிறார்கள்.
அந்த அடிப்படையில் அவர்களுடன் கலந்துரையாடியதன்படி நீதிமன்ற விசாரணையில் இருக்கும் ஒரு விடயம் தொடர்பில் இவ்வாறான விடயங்களை செய்வது நீதிமன்ற அவமதிப்பாக கருதி அவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்து வழக்கு தாக்கல் செய்யவும் முடியும்.
அத்தோடு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினார்கள் என்று கூறி சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்று கொடுப்பதற்கான ஏற்பாடுகளும் இருக்கின்றன.
எனவே இவ்வாறு AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படங்களை பகிர்வதை நிறுத்த வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் எதிகாலத்தில் தொடர்ந்து இதிப்போன்ற நடவடிகைகள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.