Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியா வடக்கு பிரதேசசபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி

ஜூன் 27, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வவுனியா வடக்கு பிரதேசசபையில் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர் திருநாவுக்கரசு கிருஸ்ணவேணி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் கட்சியின் விநாயகமூர்த்தி சஞ்சுதன் உபதவிசாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

வவுனியா வடக்கு பிரதேசசபைக்கான தவிசாளர்,உபதவிசாளர் தெரிவுகள், வடக்குமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி தலைமையில், சபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்றுமாலை நடைபெற்றது.

இதன்போது தவிசாளர் ஒருவரை பிரேரிக்குமாறு கோரப்பட்ட நிலையில் தமிழரசுக்கட்சி சார்பில் தி.கிருஸ்ணவேணி பிரேரிக்கப்பட்டார்.தேசிய மக்கள் சக்தி சார்பில் ஞானமுத்து அகிலன் பிரேரிக்கபட்டார்

தவிசாளராக இருவரது பெயர்கள் பிரேரிக்கப்பட்டமையால் வாக்கெடுப்பின் மூலம் அதனை தெரிவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில் வாக்கெடுப்பை ரகசியமாகவா, அல்லது பகிரங்கமாக நடாத்துவது என ஆணையாளரால் கோரப்பட்டது.

இதன்போது தெரிவுகளை ரகசியமாக நடாத்துமாறு தேசியமக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்தனர். அதற்கு ஆணையாளர் மறுப்பு தெரிவித்த நிலையில் தேசியமக்கள் சக்தி மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சியின் இரு உறுப்பினர்கள் என 8பேர் சபையில் இருந்து வெளிநடப்பு செய்திருந்தனர்.

சபையில் மீதம்15உறுப்பினர்கள் இருந்த நிலையில் அவர்கள் அனைவரும் தெரிவுகளை பகிரங்கமாக நடாத்துமாறு வாக்களித்திருந்தனர்.பெரும்பாண்மை வாக்குகளின் அடிப்படையில் தவிசாளர் தெரிவு பகிரங்கமாக நடாத்தப்பட்டது.

அந்தவகையில் தவிசாளராக பெயர் பிரேரிக்கப்பட்ட கிருஸ்ணவேணிக்கு15வாக்குகள் ஆதரவாக கிடைக்கப்பெற்றது.

அவருக்கு தமிழரசுக்கட்சியின் 5வாக்குகளும், சங்கு கூட்டணியின்3 வாக்குகளும் ஐக்கியமக்கள் சக்தியின்2வாக்குகளும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் 4வாக்குகளும்,சர்வஜன அதிகாரத்தின் ஒரு வாக்குமாக15 வாக்குகள் ஆதரவாக அளிக்கப்பட்டது.

வெற்றிபெறுவதற்கு 12உறுப்பினர்களின் ஆதரவு போதுமான நிலையில் 15வாக்குகள் கிடைக்கப்பெற்ற கிருஸ்ணவேணி புதிய தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இதனையடுத்து உப தவிசாளருக்கான தெரிவு இடம்பெற்றது. உபதவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரசின் உறுப்பினர் விநாயகமூர்த்தி சஞ்சுதன் அவர்களின் பெயர் பிரேரிக்கப்பட்டது.

உபதவிசாளராக வேறு நபர்களின் பெயர்கள் பிரேரிக்கப்படாத நிலையில் சஞ்சுதன் போட்டியின்றி உபதவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.

முந்தைய செய்தி எயார் இந்தியா விமான விபத்து விசாரணயை நிராகரித்தது இந்திய மத்திய அரச!
அடுத்த செய்தி யாழ் மாநகர சபையில் உறுப்பினர்கள் நியமிப்பதில் குழப்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட 14 தமிழக மீனவர்கள் கைது……

மார்ச் 7, 2025
இலங்கை

வலி. வடக்கு சமூக அபிவிருத்திக் குழுத் தலைவர்களுக்கு நியமனம்

டிசம்பர் 29, 2025
அண்மைய செய்திகள்உலகம்

பெண்களை கொன்று பன்றிகளுக்கு இரையாக்கிய பண்ணையாளர்!

அக்டோபர் 5, 2024
இலங்கை

கயிறு கட்டிய நிலையில் குளத்தில் இருந்து முதியவரின் சடலம் மீட்பு.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?