உலகில் சில நாடுகளுக்கு இடையிலான முரண்பாடானது தொடர்ந்துக் கொண்டே செல்கின்றது. இந்நிலையில் ஈரான் மீது அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ஸி ரஷ்யாவிற்க்கு பயணிக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி அப்பாஸ் அரக்ஸி, ரஷ்ய ஜனாதிபதியான புட்டினை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக இஸ்தான்புல் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.