மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் நாளை ஹட்டன், மல்லியப்பு சந்தியில் முற்பகல் 10 மணிக்கு அமைதி வழி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இந்த அமைதி வழி போராட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தலைமை தாங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்திற்கு மலையக மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
