பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன்
அநுராதபுரம், விஹாரபாலுகம வித்யாராஜ வித்தியாலயத்தில் 4 ஆம் வகுப்பில் கல்வி கற்ற சிறுவன் , நேற்று முன்தினம் மாலை உயிரிழந்துள்ளார்.
மேலும் குறித்த சிறுவன் தனது சில நண்பர்களுடன் பக்கத்து வீட்டில் வளர்க்கப்பட்ட பசுவுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது, பசு திடீரென வீதியில் வேகமாக ஓடியது.
அப்போது, பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கிய சிறுவன், சுமார் 900 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, பலத்த காயங்களுடன் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் சிகிச்சை பலன் இன்றி சிறுவன் நேற்று மதியம் உயிரிழந்துள்ளார்.