‘இலங்கை சிங்கள சினிமாவின் அரசி ‘ என்று அழைக்கப்படும் பிரபல நடிகை மாலினி பொன்சேகா தனது 78வது வயதில் நேற்று முன்தினம் (24) கொழும்பில் காலமானார்.
காலஞ்சென்ற பிரபல நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிச் சடங்குகள் கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் அரசின் முழு ஆதரவுடன் இடம்பெற்றது.
இறுதிச் சடங்கின் போது பிரதமர் ஹரிணி அமரசூரிய உட்பட பல அரசியல் பிரமுகர்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.
இந்நிலையில், பலரின் கண்ணீருக்கு மத்தியில் மாலினி பொன்சேகாவின் உடல் அக்கினியில் சங்கமமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.