Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

வாழைச்சேனையில் மண் அழ்வை எதிர்த்து மக்கள் ஆர்பாட்டம்…

மே 8, 2025
வாழைச்சேனை
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

வாழைச்சேனை கிண்ணியடி பிரதேசத்தில் மீன் வளர்க்கும் திட்டம் என்ற போர்வையில் பாரிய குழிகளை தோண்டி மண் அகழ்வை எதிர்த்து பிரதேச மக்கள் மண்ணை ஏற்றிச் செல்லும் கனரக வாகனத்தை இன்று வியாழக்கிழமை (08) வழிமறித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பொலிசாருடன் பேசுவதற்கு சென்ற தமிழரசு கட்சி வேட்பாளர்; உட்பட இருவரை கைது செய்ததயைடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன் பொலிசாரின் அடாவடியை எதிர்த்து சுட்டெரிக்கும் வெய்யிலில்; தொடர்ந்து மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கிண்ணியடி ஜஸ் உற்பத்தி நிலையத்துக்கு அருகாமையிலுள்ள தனியார் காணி ஒன்றில் 2021 ம் ஆண்டு மீன் வளர்க்கும் திட்டத்தின் கீழ் பாரிய குழிகளை தோண்டி மண் அகழ்ந்து வெளியிடங்களுக்கு எற்றிச் சென்று விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதனை கண்டித்து கடந்த காலத்தில் கிராமத்து இளைஞர்களினால் கண்டன ஆர்ப்பாட்டங்களையடுத்து இத் திட்டம் இடைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் கடந்த முதலாம் திகதி குழிகளை தோண்டி மண் அகழ்வில் ஈடுபட்டதையடுத்து அங்கு சென்ற கிராம மட்ட அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மண் அகழ்வில் ஈடுபட்டவர் தற்போது எங்களிடம் அனுமதி உண்டு என தெரிவித்து பொலிசாருக்கு தெரிவித்த முறைப்பாட்டையடுத்து எதிர்ப்பு தெரிவித்த டூ பேரை பொலிசார் கைது செய்து அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து பொலிஸ் பிணையில் விடுவித்தனர். .

இந்த நிலையில் சம்பவதினமான இன்று காலை 10.00 மணியளவில் பிரதேச மக்கள் ஒன்று திரண்டு அகழ்ந்;த மண்ணை ஏற்றிக் கொண்டு வேறு இடத்துக்கு கொண்டு சென்ற கனகர வாகனத்தை வீதியில் வழிமறித்து எங்கள் கிராம மண் வளத்தை அழிக்காதே, மண் வளத்தை அழிக்கும் துரோகியே ஒழிக, சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பு என சுலோகங்கள் ஏந்தியவாறு குறித்த திட்டத்தினை நிறுத்த கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அங்கு சென்ற பொலிசாருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழரசு கட்சி வேட்பாளர் மற்றும் இளைஞன் சென்று பேசிய நிலையில் அவர்கள் இருவரையும் பொலிசார் கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன் அங்கு பொலிசார் குவிக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து ஆர்பாட்டகாரர்கள் கைது செய்த இருவரையும் விடுதலை செய்யுமாறும் கோரிய நிலையில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக வழக்கு பதிவு செய்துவிட்டு அவர்களை பிணையில் விடுவித்தனர்.

இது தொடர்பாக அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் பிரதேச செயலாளர் நில அளவை சுரங்க பணியகம் (புளுஆடீ) மாற்றும் மாவட்ட நன்னீர் மீன் வளர்ப்பு அலுவலகம், மத்திய சுற்றாடல் அதிகார சபை போன்ற திணைக்களங்களுடன் விசேட கலந்துரையாடல் இடம்பெற்று அடுத்து வரும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் வரை இந்த மண் அகழ்வை இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தீர்மானித்தனர்.

இருந்தபோதும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், அங்கு கொட்டகை அமைத்து அமர்ந்து தொடர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி கிளிநொச்சி மத்திய பேருந்து நிலைய அபிவிருத்தி கலந்துரையாடல்..
அடுத்த செய்தி யாழில். யானை மிரண்டதால் இருவர் காயம்…

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

இலட்சியத்தை வெல்ல இனியாவது வாய்ப்புத்தாருங்கள் – க.இன்பராசா தெரிவிப்பு

பிப்ரவரி 1, 2026
இலங்கை

மாணவர்களை தண்டிப்பது கல்வியின் ஒரு பகுதியல்ல – அமைச்சர் விளக்கம்!

அக்டோபர் 3, 2025
அண்மைய செய்திகள்உலகம்

தென்கொரியாவை முற்றாக அழித்துவிடுவோம் என வடகொரியா எச்சரிக்கை

பிப்ரவரி 26, 2026
இலங்கை

எம்மை சுட்டாலும் நாம் எதிர்ப்போம் – பா.உ. ரவிகரன் சூழுரை( Video)

டிசம்பர் 9, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?