இந்தியா – பாகிஸ்தான் இடையே 6 ஆவது நாளாக பரஸ்பர துப்பாக்கிச் சூடு
இந்தியா – பாகிஸ்தான் இடையே இன்று 6 ஆவது நாளாக பரஸ்பரத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் 6 ஆவது நாளாக துப்பாக்கிச் சூடு நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
இதற்கு, இந்திய இராணுவத் தரப்பிலிருந்து பதிலடித் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜம்மு – காஷ்மீரின் எல்லைப் பகுதிகளில் கடந்த 6 நாட்களாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு வருகிறது.