கோடை காலத்தில் நமக்கு அதிக நீர்ச்சத்து தேவைப்படுகிறது. இவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அவற்றில் நிறைய தண்ணீர் இருப்பதால் உடலில் நீரிழப்பு ஏற்படாது. தர்பூசணியில் 90 சதவீதத்திற்கும் அதிகமான நீர் உள்ளது. எனவே அதை சாப்பிடுவதன் மூலம் உடலை நீரேற்றமாக வைத்திருக்க முடியும்.
குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் தர்பூசணியை தினமும் சாப்பிடலாம். இருப்பினும், கர்ப்பிணிப் பெண்கள் தர்பூசணி விதைகளை சாப்பிடலாமா என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் உள்ளது. இதைப் பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, கர்ப்பிணிப் பெண்கள் எந்த சந்தேகமும் இல்லாமல் தர்பூசணி விதைகளை சாப்பிடலாம். ஏனெனில் இந்த விதைகளில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
இவற்றை பச்சையாகவோ அல்லது வறுத்து சிற்றுண்டியாகவோ சாப்பிடலாம். மேலும் சாலட்கள், தயிர் மற்றும் சூப்பில் சேர்த்தும் சாப்பிடலாம். தர்பூசணி விதைகளை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து முளைக்கவைத்து சாப்பிடலாம். இதில் அதிக சத்துக்கள் நிரம்பியுள்ளன. இருப்பினும், பலருக்கு பச்சை விதைகளை சாப்பிடுவது பிடிக்காது. எனவே, இவற்றை சிறிது உப்பு மற்றும் மிளகு சேர்த்து மொறுமொறுப்பாகும் வரை வறுத்தும் சாப்பிடலாம்.
தர்பூசணி விதைகளில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின் B , மக்னீசியம், இரும்பு, பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் போன்ற பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் கருவில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக வளர தேவையான ஊட்டச்சத்துக்கள் ஆகும். .
கர்ப்பிணிப் பெண்களுக்கு பொதுவாக ரத்த சோகை பிரச்சனை இருக்கும். 50 கிராம் தர்பூசணி விதைகளில் தோராயமாக 2 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது. ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு தினமும் குறைந்தது 2 மில்லி கிராம் இரும்புச்சத்து தேவைப்படுகிறது. எனவே, கர்ப்பிணிப் பெண்கள் தர்பூசணி விதைகளை சாப்பிட்டால், அவர்கள் தங்கள் இரும்புச்சத்து குறைபாட்டை சரிசெய்யலாம்.
மேலும் தர்பூசணி விதைகள் உங்கள் சருமத்தை சுத்தப்படுத்தவும் உதவுகின்றன. ஏனெனில் அதில் விற்றமின் சி, ஆக்ஸிஜனேற்றங்கள் போன்றவை நிறைந்துள்ளன. எனவே உங்கள் டயட்டில் தாராளமாக தர்பூசணி விதைகளை சேர்க்கலாம்.