மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சும் யாழ் மவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
“நிலையான எதிர்காலத்தை உருவாக்க அவள் வலுவான வழிகட்டியாக இருப்பாள்” என்னும் தொனிப்பொருளில் யாழ். பதில் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன், வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் பொ.வாகீசன், யாழ் மவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் ஸ்ரீமோகன், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், உளவளத்துணை உத்தியோகத்தர்கள், மாவட்ட மகளிர் சம்மேளன பிரதிநிதிகள், பெண் முயற்சியாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் யாழ் மாவட்டத்தை உள்ளடக்கிய 15 பிரதேச செயலகங்களின் பெண் முயற்சியாளர்கள் கௌரவிக்கப்படு சான்றிதழும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.