மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பச்சனூர் இருதயபுரத்தில் வாகன விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தானது மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியின் பச்சனூர் பகுதியில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
ஓயான்கொட பிரதேசத்திலிருந்து, சேருநுவர விகாரையை நோக்கி பயணித்த பேருந்தும் , அம்பாறையிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த லொறியும் நேருக்கு நேர் மோதியுள்ளது.
பேருந்தில் 28 பயணிகளுடன் பயணித்த பயணிகளுள் சிலர் காயமடைந்துள்ளதோடு எவ்வித உயிர் ஆபத்துக்களும் ஏற்படவில்லை, இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் .
இதன்படி இருவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை மாவட்ட வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுடன், இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.