Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழ் தையிட்டி விகாரை மட்டக்களப்பு மேச்சல்தரை பிரச்சனைக்கு தீர்வு வேண்டும் – அன்ரனிசில் ராஜ்குமார்.

பிப்ரவரி 13, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் கைதடி விகாரை, மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு மேச்சல்தரை பிரச்சனைகளான தமிழர்களுக்கான தீர்வுளை ஜனாதிபதி பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதுடன் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிடில் இனங்களுக்கிடையே பாரிய முறுகல் நிலை ஏற்படும். இதனால் மீண்டும் இன மத கலவரங்களால் இரத்தஆறு ஓடும் வாய்ப்புக்கள் உள்ளது. என ஈபிடிபி கட்சி மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்ரனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) காரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ் தையிட்டி விகாரைகள் விவகாரத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் ஒன்றினைந்து எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் போது விகாரைக்கு ஊடகவியலாளர்கள் செல்வத்கு பொலிசார் அனுமதியளிக்காது வீதியில் தடுத்து நிறுத்தினர். எனவே இனவாதம் மதவாதம் பேசக்கூடாது ஊடக சுதந்திரம் வேண்டும் என ஆட்சியை கைப்பற்றிய தற்போதைய அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை மறுக்கின்றனரா? எங்களுக்கு சந்தேகமாக இருக்கின்றது.

ஜனாதிபதி ஆட்சி பீடம் ஏறும் போது என்ன சொல்லி நாட்டை பொறுப்பெடுத்தார் ஊடக சுதந்திரம் தேவை என்றார். ஆனால் தையிட்டி விவகாரத்தில் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் முற்றுமுழுதாக தடுக்கப்பட்டுள்ளது என கருதுகின்றோம் .

இந்த விகாரை பிரச்சனை நீண்டகாலமாக இடம்பெற்றுவருகின்றது. இதற்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும் அவ்வாறே மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரை விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி தமிழர்களுக்கான இந்த தீர்வுளை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

அதேவேளை தமிழர்களின் நிலங்களில் சட்டவிரோதமான சிங்கள குடியேற்றங்களை தடுக்கவேண்டும் இந்த சட்டவிரோத குடியேற்றங்களை தடுக்காது விட்டால் நிச்சயமாக இனங்களுக்கிடையே முறுகல் ஏற்படும் இனங்களுக்கிடையே பாரிய முறுகல் நிலை ஏற்படும் இதனால் மீண்டும் இரத்தஆறு மீண்டும் ஒடும் வாய்ப்புக்கள் உள்ளது.

கடந்த காலத்தில் யுத்தத்தினால் மூன்று இனங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு பொருளாதார சுமையினால் தாங்கமுடியாத நாடாக இலங்கை உள்ளதுடன் வாழ்க்கை செலவை எடுத்துக் கொண்டால் தேங்காயின்விலை, அரிசி, உப்பின் விலைகள் சொல்லதேவையே இல்லை அப்படியான நாட்டிலே மீண்டும் இனமுறுகல் ஏற்பட்டு மத, இன கலவரங்கள்; உருவாகுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றது

எனவே ஜனாதிபதி தமிழர்களின் நிலங்களில் சிங்களவர்களை திட்டமிட்டு குடியேற்றம் செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்தி தீர்வை பெற்றுக் கொடுக்க ஆவண செய்யுமாறும் இனங்களுக்கிடையிலான ஒற்றுமை புரிந்துணர்வு நல்லிணக்கத்தை கட்டியொழுப்பி முழுமையான ஊடக சுதந்திரத்தை இலங்கை தேசத்தில் உறுதிப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

முந்தைய செய்தி பயன்பாடின்றி காணப்படும் கருவேப்ப முறிப்புக் குளத்தையும் பார்வையிட்டார் – ரவிகரன் எம்.பி
அடுத்த செய்தி இலங்கைக்கு கடத்த இருந்த 10 லட்சம் மதிப்பிலான உலர்ந்த இஞ்சி பறிமுதல்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

மக்கள் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் வெள்ளத்தினால் பாதிப்பு.

பிப்ரவரி 3, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

தப்பியோடிய சந்தேகநபர் மீண்டும் கைது

மே 27, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

கொழும்பு நகர முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கு ஏனைய கட்சிகளின் ஆதரவை ஐக்கிய மக்கள் சக்தி கோரும் – ரஞ்சித் மத்தும பண்டார

மே 7, 2025
இலங்கை

பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று!

ஜூலை 29, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?