Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

தமிழர்களின் உரிமைகள், அபிலாஷைகளுக்காக அயராது உழைத்தவர் மாவை – நா.வேதநாயகன்

ஜனவரி 31, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

தனது வாழ்நாளை தமிழ் மக்களின் அரசியல் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக அர்ப்பணித்து, அவர்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளுக்காக அயராது உழைத்தவர் மாவை சேனாதிராசா என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

‘தமிழ் மக்களை நீண்டகாலம் பிரதிநிதித்துவப்படுத்திய மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவருமான சோ.சேனாதிராஜாவின் மறைவை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.

அவர் தனது வாழ்நாளை தமிழ் மக்களின் அரசியல் மற்றும் சமூக மேம்பாட்டுக்காக அர்ப்பணித்து, அவர்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளுக்காக அயராது உழைத்தவர். அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தமிழ் மக்களுக்கான தியாகம் என்பன அரசியல் நிலப்பரப்பில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளன.

யாழ். மாவட்டச் செயலராக நான் முன்னர் பணியாற்றிய காலத்தில், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவர்களில் ஒருவராக இருந்த அவர், தமிழ் சமூகத்துக்காக ஆற்றிய பணிகள் அளப்பரியன. வலி. வடக்கின் மீள்குடியமர்வு மற்றும் அந்தப் பிரதேசத்தின் உயர்வுக்காக அவர் செய்த சேவைகளை அருகிலிருந்து பார்த்திருக்கின்றேன்.

காலம் முழுவதையும் இந்த மக்களுக்காகவே செலவிட்ட ஒருவரை இன்று இழந்து நிற்கின்றோம். வடக்கு மாகாண மக்கள் சார்பாக, அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்தி மட்டக்களப்பில் கறுப்பு ஜனவரியையிட்டு ஊடகவியலாளர்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்.
அடுத்த செய்தி ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞனர்களை மீட்டு தாருங்கள்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

புதுப்பிக்கப்படும் முல்லைத்தீவு மாவீரர் துயிலும் இல்லம்!(Video)

நவம்பர் 13, 2025
இலங்கை

மட்டக்களப்பு புல்லுமலையில் பஸ் வண்டி சாரதி நடத்துனரை தாக்கிய இருவர் கைது.

பிப்ரவரி 21, 2025
இலங்கை

வவுனியா அந்தோனியார் ஆலயத்தில் புது வருட ஆராதனை

ஜனவரி 1, 2026
இலங்கை

உயர்தரப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இன்று!

ஜூலை 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?