Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

யாழில். போராட்டத்திற்கு தடை விதிக்க கோரிய பொலிசாரின் மனு தள்ளுபடி.

ஜனவரி 30, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தடை விதிக்க கோரிய பொலிசாரின் மனுவை யாழ் . நீதவான் நீதிமன்று தள்ளுபடி செய்துள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வருகை தரவுள்ள நிலையில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டு இருந்தனர்.

அந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை, நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன், வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் ச.சசிகரன், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் பிரபாகரன், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் முருகையா கோமகன், தற்காலிக சுகாதார உத்தியோகஸ்தர்கள் சங்க தலைவர் எஸ்.ஜெஸ்மின் ஆகிய ஐவரின் பெயரை குறிப்பிட்டு, நாளைய தினம் யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் போராட்டங்களை நடாத்த தடை விதிக்க வேண்டும் என பொலிஸார் மன்றில் மனு தாக்கல் செய்தனர்.

குறித்த மனு மீதான விசாரணைக்காக பெயர் குறிப்பிட்ட ஐந்து நபர்களையும் மன்றில் முன்னிலையாகுமாறு மன்று அழைப்பு கட்டளை நேற்றைய தினம் விடுத்திருந்தது.

அந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை, அழைப்பு கட்டளை வழங்கப்பட்ட நபர்கள் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

அதில் வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவரின் சார்பில் மன்றில் முன்னிலையான சிரேஸ்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் , வேலையற்ற பட்டதாரிகள் தமது கோரிக்கையை முன் வைத்து , ஜனாதிபதியின் கவனத்தினை ஈர்க்கும் முகமாக அமைதியான வழியில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்.

அமைதியான முறையில் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் விடுக்காது, எமது கோரிக்கையை முன் வைத்து போராடவுள்ளனர். அதற்கு மன்று அனுமதி வழங்க வேண்டும் என விண்ணப்பம் செய்தார்.

சட்டத்தரணியின் விண்ணப்பத்தினை அடுத்து, உயர் பாதுகாப்பு வலயமாக கட்டமைக்கப்படும் பகுதிக்குள் செல்லாது , ஜனாதிபதி வரும் பாதையில், வீதிக்கு குறுக்காக செல்லாது, வீதியின் ஓரமாக கவனயீர்ப்பு போராட்டத்தை அமைதியான முறையில் முன்னெடுக்க மன்று அனுமதித்தது.

முந்தைய செய்தி மாவை சேனாதிராஜா அவர்களின் மறைவு, தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும்.” – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்
அடுத்த செய்தி தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பித்துவைப்பு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

உலக சாதனை படைத்த ஆறு வயது சிறுவன்!

ஆகஸ்ட் 8, 2025
இலங்கை

இலங்கை காவல்துறை ஆரம்பிக்கவுள்ள புதிய விசாரணைப் பிரிவு!

ஆகஸ்ட் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் ரணில்

ஏப்ரல் 28, 2025
இலங்கை

அமெரிக்க நிர்வாகம் எங்களை அழைத்தால் வொஷிங்டனுக்குச் சென்று எமது பிரச்சனைகளை எடுத்துக்கூறுவோம்.

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?