Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

ஒற்றையாட்சி தான் தீர்வு எனில் அரசியலில் இருந்து ஒதுங்குவேன் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

ஜனவரி 29, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

ஒற்றையாட்சி அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டால் அதன் பின் தேசியம் பேசி பயனில்லை. அதனால் நானும் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது.

அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய அரசாங்கமானது அறுதிப் பெருமபான்மையுடன் உள்ளது. இந்த அரசாங்கம் மக்கள் மத்தியில் தனது இருப்பை தக்க வைக்க ஏதாவது செய்ய வேண்டியுள்ளது.

அதனடிப்படையில் விரைவாக ஒரு அரசியலமைப்பை கொண்டு வர வாய்ப்புள்ளது. அறுதிப் பெரும்பான்மையுடன் இருப்பதால் இந்த அரசாங்கம் கொண்டு வரும் அரசியலமைப்பை பாராளுமன்றத்தில் நிறைவேற்றும்.

குறைந்த பட்சம் இந்த அரசாங்கம் கொண்டு வரும் ஒற்றையாட்சி அரசியலமைப்பை தமிழ் தேசியம் பேசுகின்ற 10 பேராவது எதிர்க்காவிட்டால் தமிழ் தேசிய கட்சிகளின் ஆதரவுடன் இது நிறைவேற்றப்பட்டதாக கருதப்படும். அதன் பின் நாம் தேசியம் பேசி பயனில்லை.

எனவே, தமிழ் தேசிய கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒற்றையாட்சி அரசியலமைப்பை எதிர்த்து வடக்கு – கிழக்கு தமிழர் தேசம் என அங்கீகரிக்கப்பட்ட, தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு அரசியலமைப்பை கோர வேண்டும்.

சமஸ்டி ஊடாக மட்டுமே அதனை வழங்க முடியும். எனவே அனைத்து தமிழ் தேசிய கட்சிகளும் இந்த விடயத்தில் ஒன்றுபட வேண்டும்.

அத்துடன், ஒற்றையாட்சி அரசியலமைப்பு நடைமுறைக்கு கொண்டு வந்தால் அதனை சர்வசன வாக்குரிமைக்கு விட வேண்டும். இதன் போது வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை உணர்ந்து ஒற்றையாட்சி அரசியலமைப்பை எதிர்க்க வேண்டும்.

தமிழ் தேசிய கட்சிகள் மீது உள்ள வெறுப்பால் பாடம் புகட்ட வேண்டும் என கடந்த தேர்தல்களில் வேறு கட்சிகளுக்கும், குழுக்களுக்கும் வாக்களித்து இருந்தாலும் கூட, அரசியலமைப்பு விடத்தில் ஒன்று பட வேண்டிய தேவை உள்ளது. இது எமது அடிப்படை உரிமைப் பிரச்சனை. அதனை மக்கள் விளங்கிக் கொள்ள வேணடும்.

ஒற்றையாட்சி அரசியலமைப்பு நிறைவேற்றப்படுமாக இருந்தால் அதன்பின் கட்சிகள் தமிழ் தேசியம் என்ற பெயரை வைத்திருப்பதிலும், தேசியம் பேசுவதிலும் எந்த பயனும் இல்லை. அதனால் நானும் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவேன்.

அதன் பின் தமிழ் மக்களுக்கு எந்த விமோசனசனமும் இல்லை. 76 வருட போராட்டம் தோல்வி கண்டதாக முடியும். இந்த ஆபத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

முந்தைய செய்தி ஆசிரிய ஆலோசகர் சங்கத்துடன் சந்திப்பு.
அடுத்த செய்தி அநுராதபுரத்தில் காணாமல் போன வெளிநாட்டு பிரஜை யாழில் கண்டுபிடிப்பு.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

செப்டம்பர் 7 ஆம் திகதி தோன்றும் அரிய வகை நிலவு!

ஆகஸ்ட் 31, 2025
இலங்கை

ரணில் விக்கிரமசிங்கவை பார்க்க பிரதமர் செல்லவில்லை – பிரதம செயலாளர்

ஆகஸ்ட் 25, 2025
இலங்கை

மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் இடம் பெற்ற பெரிய வியாழன் திருப்பலி

ஏப்ரல் 3, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

ஐந்து லட்சத்திற்கு விற்கப்பட்ட மாம்பழம்!

செப்டம்பர் 10, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?