யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை மாணவனான பரமேஸ்வரன் பிரசோதன் புலமை பரிசில் பரீட்சையில் 186 புள்ளிகளை பெற்றுள்ளார்.
குறித்த பாடசாலையில் 220 மாணவர்கள் பரீட்சை எழுதிய நிலையில் , 134 மாணவர்கள் வெட்டு புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்றுள்ளனர்.
அதேவேளை யாழ் . சென்ஜோன் பேஸ்க்கோ பாடசாலை மாணவனான அக்சாத் ராகவன் எனும் மாணவன் 185 புள்ளிகளை பெற்றுள்ளார்.
குறித்த பாடசாலையில் இருந்து 216 மாணவர்கள் பரீட்சை எழுதிய நிலையில் 135 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளை பெற்றுள்ளனர்.