இந்த ஆண்டு ஆரம்பித்து முதல் மூன்று வாரங்களிலேயே நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை தாண்டியுள்ளது.
அதன்படி, சுற்றுலா மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவு அறிக்கையில், ஜனவரி 1 முதல் 19 ஆம் திகதி வரை 153,761 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர். இவ்வாறு வருகை தந்தவர்களில் 27,166 இந்தியர்கள் 22,033 ரஷ்யர்கள் மற்றும் 9,763 பிரித்தானிய பிரஜைகள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 102,545 ஆகப் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.