நிலச்சரிவு காரணமாக தடைபட்டிருந்த ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன இடையேயான ரயில் பாதை மீண்டும் சீரமைக்கப்பட்டுள்ளது. அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தும் வழக்கம் போல் தொடங்கும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு இயக்க திட்டமிடப்பட்டிருந்த இரவு அஞ்சல் ரயில் மற்றும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு இயக்க திட்டமிடப்பட்டிருந்த ரயில் ஆகியவை தற்போது மீண்டும் சேவையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் நிலச்சரிவு ஏற்பட்டதன் காரணமாக மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.