யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சுண்ணக்கல் அகழப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தென்மராட்சி பகுதியில் உள்ள மந்துவில் , வேம்பிராய் பகுதிகளில் பாரிய பள்ளங்கள் காணப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் இருந்து சுண்ணக்கற்களை அகழ்ந்து திருகோணமலைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிரபல வர்த்தகரான சிற்றி ஹாட்வெயார் உரிமையாளர் தாம் சட்ட ரீதியாக அனுமதிகள் பெற்று சுண்ணக்கல் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் சுண்ணக்கற்கள் அகழ்ந்த பிரதேசங்களில் பாரிய பள்ளங்கள் காணப்படும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.